சம்பூர் கடற்கரையில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!

Date:

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் இன்று (21) காலை மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

போயா வடிவிலான இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளமும் கொண்டதாக உள்ளது. இதன் இயல்பும் உருவமும் இதுவரை சரியாக அடையாளம் காணப்படவில்லை, இது ஆள்மறைவான புவிசார் பொருளா அல்லது கடல்சார் இயந்திரப் பகுதியா என்ற தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

பிரதேச மக்கள் இது தொடர்பாக அவதானித்து, சம்பூர் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.

மர்ம பொருளின் தோற்றம் மற்றும் அதன் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...

மட்டக்களப்பில் பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து நவம்பர் 10 திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்