28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
கிழக்கு

சேருநுவர-கந்தளாய் வீதியில் பஸ் விபத்து – 14 பேர் காயம்

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று சேருநுவர-கந்தளாய் வீதியில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவில் இன்று (20) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக பஸ் வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி, கவிழ்ந்தாக சேருநுவர பொலிஸார் தெரிவிகின்றனர்.

விபத்து இடம்பெறும் போது பஸ்ஸில் சுமார் 49 பயணிகள் இருந்ததாகவும் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 14 பயணிகள் இவ்விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக சேருநுவர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போதைய விசாரணையில், விபத்துக்கான காரணம் சாரதியின் கவனயீனமே என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் சேருநுவர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை சர்வோதயம் அருகில் விபத்து

east tamil

இறக்கக்கண்டியில் இலவச மருத்துவ முகாம்

east tamil

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஊழலை விசாரிக்க குழு நியமனம்

east tamil

திருகோணமலை கடற்கரையில் சடலம் மீட்பு

east tamil

கிழக்கு மாகாண ஆளுநருடன் கணக்காய்வு அதிகாரிகளின் சிறப்பு கலந்துரையாடல்

east tamil

Leave a Comment