நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Date:

அம்பாறை மஹாஓயா வீதி, தற்போதைய நிலவரப்படி, முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முதல் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த வீதியானது நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.

இப் பகுதியில் ஏற்பட்ட வெல்ல அனர்த்தம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் இவ்வீதியில் போக்குவரத்திலீடுபடும் வாகனங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பயன்படுத்துவது அவசியமாகும் எனவும், வெள்ளத்தில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்