மன்னார் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு – வழி நடத்தியவர் வெளிநாட்டில்!

Date:

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழக்கிழமை (16) நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இரு மனிதர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாட்டு வண்டி சவாரியை அடிப்படையாகக் கொண்ட முரண்பாட்டில் இடம்பெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டில் இப்படியான சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர், பின்னர் 2023 ஆம் ஆண்டு மற்றொரு சம்பவத்தில் இரு பேர் துப்பாக்கிச்சூட்டுக்குள்ளானார்கள். இப்போது, இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் முன்பே உயிரிழந்தவர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களாக இருக்கின்றனர்.

பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய, கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த சம்பவம் தொடர்பாக பேசியதிலே, குறித்த துப்பாக்கி சூட்டை வெளிநாட்டில் உள்ள ஒருவர் வழி நடத்தியதாக தெரிவித்தார். அவர் மீது சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி பொலிஸாரின் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்