தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (17) அதிகாலை 5 மணியளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பஸ்ஸும் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் குறித்த பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளார். அவருடைய சடலம் தற்போது பெலியத்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் நால்வர் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான பஸ்ஸில் 12 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். இதில் சிறிய காயங்களுடன் இருந்த 9 பேர் பெலியத்த வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு மேலதிக சிகிச்சைக்காக தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..
சுற்றுலாப் பயணிகள் பயணித்த பஸ்ஸின் விபத்து இந்த சம்பவத்திற்கான கவனத்தை அதிகரிக்கச் செய்துள்ளதோடு, நெடுஞ்சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தேவையை மீண்டும் வலியுறுத்துவதாக அமைகிறது.