அம்பாறை கல்முனை பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதால், அந்த வழிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது மற்றும் நகரப்பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், இதனால் வீதி விபத்துகள் அதிகரிக்கின்றன என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, கட்டாக்காலி மாடுகளின் எண்ணிக்கையை குறைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நகரப்பகுதிகளில் மாடுகளை கட்டுப்படுத்த வீதி கண்காணிப்பு திட்டங்கள் அமுல்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.