இந்தியாவில் பெங்களூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் குடிபோதையில் மணமகன் செய்த செயல் இப்போது இணையத்தை உலுக்கி வருகிறது. அனைத்து ஏற்பாடுகளையும் சரியாக செய்து மகளின் வாழ்க்கையில் முக்கிய தருணத்தை கொண்டாட தயாராக இருந்த மணமகளின் தாய், மாமியாராக மாறும் முன்பே அதிர்ச்சி அடைந்தார்!
மணமகன் தனது நண்பர்களுடன் குடித்து போதையில் திருமண மேடைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டதோடு, விருந்தினர்களிடமும் தகாத முறையில் நடந்து கொண்டார். இதைக் கண்டதும், அதிர்ச்சியடைந்த மணமகளின் தாய் “இந்த திருமணமே வேண்டாம்” என அறிவித்ததுடன், கையெடுத்து கும்பிட்டு, விருந்தினர்களிடமும் “அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள்” என கேட்டுக்கொண்டார்.
மேலும், குறித்த மணமகன் ஆரத்தி தட்டை தூக்கி வீசியது, வருங்காலத்தில் மகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என கவலைப்பட்ட தாயின் முடிவை துரிதப்படுத்தியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மணமகளின் தாயின் முடிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.