25.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இலங்கை

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 சம்பள உயர்வை வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பி மனோ கணேசன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09.01.2025 வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், பெருந்தோட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இவர்களுக்கான சம்பள உயர்வு அவசியம் என்றும் தெரிவித்தார்.

“பெருந்தோட்ட மக்கள் பொருளாதார சிரமங்களை சந்தித்து வருகின்றனர். காணி மற்றும் வீட்டு உரிமையின்றி வாழ்ந்து வருகின்ற இவர்கள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றனர். உலக உணவு தாபனம் மற்றும் செஞ்சிலுவை சங்க அறிக்கைகளிலும் இவர்கள் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருக்கின்றனர்,” என்றார்.

மனோ கணேசன், “கடந்த கால அரசுகள் 900 ரூபா மற்றும் 1,700 ரூபா சம்பள உயர்வுகளை அறிவித்தாலும், செயல்பாட்டில் 1,300 ரூபாவே வழங்கப்பட்டது. எனவே, 2025 ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்” என கூறினார்.

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜா தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். “இவர் மற்றும் பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் இந்த முயற்சிக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும்” என்றார்.

“தேயிலை ஏற்றுமதிக்கு அறவிடப்படும் செஸ் வரியில் ஒரு பகுதியை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வரிச் சலுகையாக வழங்கி, இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனோ கணேசன் அரசை கேட்டுக்கொண்டார்.

“இலங்கையின் மிகவும் பின்தங்கிய மக்களாகிய பெருந்தோட்ட மக்களை உதவாமல் விட்டால், நாட்டில் உண்மையான சமத்துவம் ஏற்பட முடியாது. எனவே, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

east tamil

நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழா

east tamil

Leave a Comment