27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
கிழக்கு

அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை

இலங்கை தேசிய சமாதான பேரவையின் (NPC) “MUSTER” திட்டத்தின் கீழ், பொதுமக்களின் கருத்துக்கணிப்பை பெறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அணி திரட்டலை நோக்கி ஒரு பயிற்சி பட்டறை அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வானது, தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சர்வ மத அமைப்புகள், பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இது, “MUSTER – Mobilizing University State Engagement for Reconciliation” திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மன் கூட்டாட்சி வெளிநாட்டு அலுவலகத்தின் நிதி ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பயிற்சி பட்டறை “Sri Lanka Barometer (SLB)”-ன் தேசியளவிலான பொதுமக்கள் கருத்துக்கணிப்பின் தரவுகளை பகிர்ந்து கொள்வதற்கான முக்கிய உரையாடலாக அமைந்தது.

Sri Lanka Barometer (SLB) குழுவின் ருமானா ரஸ்ஸாக் மற்றும் மேகலா சபேஸ்வரன், நல்லிணக்கத்தில் இலங்கை மக்களின் கருத்துகளைப் பற்றிய பல புதிய உண்மைகளை தெளிவுபடுத்தினர். இதில், சமாதானம் மற்றும் மனிதாபிமான அமைப்பின் தவிசாளர் எம்.எஸ்.ஜௌபர் மற்றும் தேசிய சமாதான பேரவையின் மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ்.எம். இக்ராம் தலைமை தாங்கினர்.

இந்த பயிற்சி பட்டறையின் மூலம், தேசிய நல்லிணக்க நிலையை மேலும் வலுப்படுத்த முனைந்துள்ளது, மேலும் சமுதாயங்களில் அமைதிக்கான வழிகளை முன்னெடுக்கும் எண்ணங்களை பரப்பியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் மக்கள் சேவைகளில் வெளிப்படைத் தன்மைக்கு முன்னேற்றம்

east tamil

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

east tamil

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

east tamil

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

Leave a Comment