26.7 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

உலகில் விசா பெற எளிதான நாடுகளின் தரவரிசையில் இலங்கை 33வது இடத்தில்

உலகளவில் விசா பெறும் எளிதான நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை பெற்றுள்ளதாக Brand Finance நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை 33ஆவது இடத்தில் உள்ளதுடன், தெற்காசியப் பிராந்தியத்தில் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. கொழும்பு நகரம் அதன் தனித்துவத்தாலும், வளமான வசதிகளாலும் முக்கியத்துவம் பெற்றதாக ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.

Brand Finance Global City Index தரவரிசையிலன்படி, கொழும்பு நகரம் 84ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் 78ஆவது இடத்தில் இருந்த நிலையில், சில இடங்களை பின்தள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார சேவைகளின் தரவரிசையில், கொழும்பு 74வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 10 இடங்களுக்கு முன்னேற்றமான மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்ட *அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள்*, புதிய நவீன சுகாதார வசதிகள் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

விசா வசதிகளில் இலங்கை 33ஆவது இடத்திலும், சுகாதார முன்னேற்றத்தில் கொழும்பு நகரம் 74ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் இந்த வளர்ச்சி நிச்சயமாக உலகளவில் வணிக முதலீடுகளை, சுற்றுலா வளர்ச்சியையும் அதிகரிக்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்

east tamil

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

east tamil

Leave a Comment