26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

டேட்டிங் செயலியில் அமெரிக்க மாடல் என ஏமாற்றி 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் கைது

கிழக்கு டெல்லி சாகர்​பூரைச் சேர்ந்​தவர் துஷர் சிங் பிஸ்த் (23). பிபிஏ பட்டம் பெற்ற இவர் நொய்​டா​வில் உள்ள தனியார் நிறு​வனத்​தில் வேலைக்கு ஆட் களை தேர்வு செய்​யும் நபராக பணியாற்றுகிறார். இவர் பம்பிள் மற்றும் ஸ்னாப்​சாட் போன்ற பிரபல டேட்​டிங் செயலிகளில் போலி பெயரில் கணக்கு தொடங்கி இந்தியா வந்திருக்​கும் அமெரிக்க மாடல் என அறிமுகம் செய்​துள்ளார்.

செயலி ஒன்றின் மூலம் விர்​சுவல் சர்வதேச மொபைல் எண்ணை பெற்று அதை பயன்​படுத்​தி​யுள்​ளார். பிரேசில் நாட்​டைச் சேர்ந்த ஒரு மாடலின் போட்​டோவை இவர் பயன்​படுத்​தி​யுள்​ளார். இதைப் பார்த்து 18 வயது முதல் 30 வயதுள்ள பெண்கள் பலர் இவருடன் நட்பை ஏற்படுத்​தி​யுள்​ளனர். இவர்​களின் நம்பிக்கையை பெற்​றபின்பு, போன் எண்கள், தனிப்​பட்ட போட்​டோக்கள் மற்றும் வீடியோக்களை கேட்டு பெற்றுள்​ளார். மாடலிங் துறைக்கு செல்ல விரும்​பும் பெண்கள் கவர்ச்சி உடையில் போட்​டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்​பி​யுள்​ளனர்.

முதலில் பொழுது​போக்​குக்காக இந்த செயலில் ஈடுபட்ட துஷர் சிங், நாளடை​வில் அந்த பெண்களை மிரட்டி பணம் பறிக்​கும் செயலில் ஈடுபடத் தொடங்​கினார். அவர்கள் அனுப்பிய கவர்ச்​சியான போட்​டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆபாச வலைதளங்​களில் விற்று விடு​வதாக கூறி பணம் கேட்டு மிரட்​டி​யுள்​ளார். சிலர் இதற்கு பயந்து துஷர் சிங் கேட்​கும் பணத்தை அவருக்கு அனுப்​பி​யுள்​ளனர். இதுபோன்ற மோசடி​யில் கடந்த 3 ஆண்டு​களாக ஈடுபட்டு 700 பெண்களை துஷர் சிங் ஏமாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு இவரது வலையில் சிக்கிய டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மேற்கு டெல்லி சைபர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். துஷர் சிங்கின் செயல்​பாடுகளை கண்காணித்த போலீ​ஸார் அவர் வசிக்​கும் சாகர்​பூருக்கு சென்று அவரை கைது செய்து அவரது மொபைல்போனை பறிமுதல் செய்​தனர். குற்றச் செயல்​களுக்கு பயன்​படுத்திய விர்​சுவல் சர்வதேச போன் எண்ணுடன் கூடிய மொபைல் போன் பறிமுதல் செய்​யப்​பட்​டது. அதில் ஏராளமான தகவல்கள் உள்ளன. டெல்லி மற்றும் அதன் சுற்று​வட்​டாரத்தை சேர்ந்த பல பெண்கள் அவரிடம் சாட் செய்​திருக்கும் தகவல்கள் கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்ளன. அதில் 4 பேரிடம் அவர் பணம் பறித்​துள்ளது தெரிய​வந்​தது. அவரிடம் 13 கிரெடிட் கார்​டுகள் இருந்தன. அவரிடம் 2 வங்கி கணக்​குகள் இருந்​துள்ளன. ஒரு கணக்கை பெண்​களிடம் இருந்து பணம் பறிப்​ப​தற்காக மட்டும் பயன்​படுத்​தி​யுள்​ளார். 2 வங்கி கணக்கு விவரங்கள் குறித்து போலீ​ஸார் விசா​ரித்து வருகின்​றனர். இவரது தந்தை டிரைவராக பணியாற்றுகிறார். தாய் இல்லத்​தரசி. சகோதரி குரு​கிராமில் ஒரு நிறு​வனத்​தில் பணியாற்றுகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment