Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் 

மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்குரிய அலுவலகம் கிளிநொச்சியில் வடக்கு மாகாண ஆளுவநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று (03) திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வந்த வடக்கு
மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் ஏ9 வீதியில் மாவட்ட
தபால் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட கட்டிடம் கடந்த 12.12.2024
அன்று சம்பிரதாயமாக பால் காய்ச்சப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று 03.01.2024 தொடக்கம் உத்தியோகபூர்வமாக
ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பிரமாண அடிப்படையிலான குறித்தொதுக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா செலவில்
குறித்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநருடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர்
இளங்கோவன். வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன் மற்றும் அமைச்சின்
செயலாளர்கள் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025வது ஆண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு இன்று

east tamil

வவுனியாவிற்கு கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு: பெண் உட்பட இருவர் கைது

east tamil

கல்கிசை: ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

east tamil

வடக்கு கிழக்கில் புராதன பௌத்த தளங்களை பாதுகாக்க விசேட திட்டங்கள் – புத்தசாசன அமைச்சர்

east tamil

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment