தண்டவாளத்தில் செல்பி எடுத்த தாயும், மகளும் ரயில் மோதி பலி

Date:

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

18 வயதுடைய மகளும் 37 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் அவர்கள் மோதுண்டுள்ளனர்.

செல்ஃபி எடுக்கும்போது அவர்களுடன் மற்றொரு இளைஞரும் அங்கு வந்திருந்த போதும் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்தின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும், அந்த நாட்டின் சர்வதேச கிரிக்கெட்டில்...

ஆர்ப்பாட்டங்கள் கொடி பிடித்தல் அறிக்கை அரசியலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் தராது– மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ரி.சரவணபவான்

ஆர்ப்பாட்டங்கள் கொடி பிடித்தல் அறிக்கை அரசியலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் தராது--...

வானில் மின்னல் தாக்கியது; ஸ்ரீலங்கன் விமானம் கட்டுநாயக்காவில் அவசர தரையிறக்கம்

மின்னல் தாக்கியதால் சிட்னி நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக கட்டுநாயக்காவில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்