இலங்கைக்கான காகிதாதிகளின் குறை நிரப்பு பிரேரணை மீதான 2ம் நாள் விவாதத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் “சிறந்த பொருளாதார சந்தையைக் கொண்டிருக்கின்ற இந்தியாவுடன் எட்கா ஒப்பந்தத்தை செய்வது பாதகமானது அல்ல என தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘‘கடந்த கால அரசாங்கங்களை விமர்சிக்கும் ஆளுந்தரப்பினர்களில் பெரும்பாலானோர் இலவசக் கல்வியின் ஊடாகவே கல்வி கற்றுள்ளார்கள், முன்னேற்றமடைந்துள்ளார்கள். கடந்த கால அரசாங்கங்கள் நாட்டுக்கு ஏதும் செய்யவில்லை என்று குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொய்யுரைக்க வேண்டாம். இலவசக் கல்வித் திட்டத்தில் 41 இலட்சம் மாணவர்கள் உள்ளடங்குகிறார்கள். இவர்களுள் 10 இலட்சம் மாணவர்களுக்கு மாத்திரம் 6,000 ரூபா நிவாரணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
பொருளாதார பாதிப்பின் பின்னர் 56 சதவீதமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 25 சதவீதமான மாணவர்களின் கல்வி கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆகவே மாணவர்கள் மத்தியில் வேறுபாடுகளை தோற்றுவிக்காமல் 41 இலட்சம் மாணவர்களுக்கும் 6,000 ரூபா கொடுப்பனவை வழங்கவேண்டும் எனவும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் நிச்சயம் பொறுப்புக் கூற வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது’’ என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் பற்றி இந்த சபையில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய விஜயம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என தனது உரையில் தெரிவித்திருந்தார்.