தற்போது வெற்றிடமாக உள்ள சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் தெரிவு செய்யும் அடிப்படையில் நாளை 17.12.2024 செவ்வாய்க்கிழமை, நாளை மறுதினம் 18.12.2024 பாராளுமன்றம் கூடி இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னர் வழமை போன்று பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாளை காலை 9.30 முதல் 10.30 வரையான நேரம் வாய்வழி பதில்களை எதிர்பார்க்கும் நேரடி கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதெனினும், புதிய சபாநாயகர் தெரிவு ஆரம்பமாகவுள்ளதாகவும் அதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகர் என்ற வகையில், அசோக ரன்வலவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதையடுத்து, 10வது பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளது. சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி சார்பில் ஏற்கனவே 3 பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதைய பிரதி சபாநாயகரின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் புதிய சபாநாயகர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.