உயர்நீதிமன்ற வியாக்கியானம் இன்னும் இல்லை: நாளை துறைமுக நகர சட்டமூல விவாதம் இல்லை?

Date:

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை பிரதமர் நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர் குழாம் ஆராய்ந்தது.

எனினும், அதன் வியாக்கியானம் சபாநாயகர் காரியாலயத்துக்கு இன்னும் கிடைக்கவில்லை.

ஆகையால், நாளைய தினம் திட்டமிட்டிருந்த, கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில் இன்று (04) காலை 11.30க்கு கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டமொன்று நடத்தப்படுகிறது. அதன்போதே தீர்மானிக்கப்படும்.

spot_imgspot_img

More like this
Related

காதலியை கொடூரமாக கொலை செய்த பின் உயிரை மாய்த்த காதலன்!

வத்தளை, பல்லியவத்தை, தன் லங்கா வீதியில் உள்ள ஒரு வீட்டில், பதினெட்டு...

இலங்கையில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம் – மனித–யானை மோதலைத் தடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்