25.7 C
Jaffna
January 19, 2025
Pagetamil
இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் காலமானார்

இலங்கை முஸ்லிங்களின் மூத்த அரசியல் தலைமையும் முஸ்லிம் தேசியக்குரலுமான, எழுத்தாளர், கவிஞர், வேதாந்தி சேகு இஸ்ஸதீன் காலமானார்.
முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலின் முதுசம் என்றும் இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் என மக்களினால் அழைக்கப்பட்டவர்.

கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் மூவின மக்களின் அன்புக்குப் பாத்திரமானவராக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் உள்ளார். இனவாதம், மதவாதம்,பிரதேசவாதமற்ற மூத்த அரசியல்வாதியும் ஆவார். மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அரசியலில் ஒன்றாக பயணித்து முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தனித்துவ அரசியல் கட்சி தேவை என முஸ்லிம் சமூகத்தை விழிப்படையச் செய்தார். அதில் வெற்றியும் கண்டவர்.

முஸ்லிம் தமிழ் ஆகிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் சில விட்டுக்கொடுப்புகளுடன் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்நதுடன் வடகிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த காலத்தில் தமிழ் தலைவர்களுடனும் தமிழ் மக்களுடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் அக்கரைப்பற்றில் காலமானார்.

-பாறுக் ஷிஹான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காக்க நன்கொடை கோரும் பெற்றோர்

east tamil

யாழ் நகைக்கடை கொள்ளை: இரணுவப் புலனாய்வளர்கள், காப்புறுதி நிறுவன முகாமையாளர்கள் கைது!

Pagetamil

இன்றைய வானிலை அறிக்கை

east tamil

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி

east tamil

நீதித்துறையில் இருந்து ஓய்வுபெற்றார் நீதிபதி இளம்செழியன் அவர்கள்

east tamil

Leave a Comment