15 ஆண்டுகளாக மர்மம் விலகாத பாலியல் தொழிலாளி கொலை வழக்கு; குற்றவாளியைக் கண்டுபிடிக்க 3D வீடியோ வெளியிட்ட பொலிஸ்

Date:

ஹங்கேரியின் நைரெகிஹாசாவில் (Nyíregyháza) பிறந்தவர் பெர்னாடெட் சாபோ. சிறுவயது முதல் வறுமையில் வாடிய குடும்பம். சாபோ தனது 18வயது வயதில் நெதர்லாந்துக்குக் குடிபெயர்ந்தார். வறுமையின் காரணமாக பெர்னாடெட் சாபோ பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டார்.

ஆம்ஸ்டர்டாமின் ரெட் லைட் மாவட்டத்தில் பாலியல் தொழிலாளியாக பணம் சம்பாதித்தார்.

அவர் கருவுற்ற பிறகு  ஒரு வளர்ப்பு குடும்பத்தில் ஒப்படைக்கப்பட்ட ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

2009 பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி பாலியல் தொழில் செய்யும் இடத்தில் தங்கியிருந்த பெர்னாடெட் சாபோவிடமிருந்து குறிப்பிட்ட நேரம் கடந்தும், எந்த அழைப்பும் வரவில்லை என்பதால், அவரின் பாலியல் தொழிலாளிகளான தோழிகள் பெர்னாடெட் சாபோவைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். அங்கு 10-க்கும் மேற்பட்ட இடத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார் பெர்னாடெட் சாபோ. அதைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்துக்கு வந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கியது.

ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கொலையாளி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பல கோணங்களில் விசாரித்தும் உண்மை வெளிவரவில்லை. இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, “கொலை செய்யப்பட்டதை யாரோ ஒருவர் பார்த்திருக்க வேண்டும். அதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அவர்கள் அதை வெளியே கூறவில்லை. யாருக்காக இதைச் செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அதனால்தான் புதிய வழியில் இந்த வழக்கை மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்” எனக் குறிப்பிட்டு ஹாலோகிராம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அதில், 19 வயதான பெர்னாடெட் சாபோவின் உருவம் 3D-யில் தெரிகிறது. நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெர்னாடெட் சாபோ, மக்கள் வருவதைப் பார்த்து எழுந்து வருகிறார். அப்போது அவருக்கு முன்னாள் இருக்கும் கண்ணாடியில் Help என வருகிறது. அந்த கண்ணாடி அறை முழுவதும் பெர்னாடெட் சாபோவின் புகைப்படங்கள், அவர் கொலை தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது நெதர்லாந்து காவல்துறையின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

விஜய் புகழ்பாடிய பாடகர்கள் மன்னிப்பு கேட்டதால் வழக்கு முடித்து வைப்பு

சூரசம்ஹாரம் விழாவில் முதல்வருக்கு அரோகரா கோஷம் எழுப்பிய பாடகர்கள் மீது நடவடிக்கை...

வெளிநாட்டுத்’ துப்பாக்கிகள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை...

காட்டு யானை தாக்குதலுக்குப் பெண் பலி: அதிகாலை வேளையில் பரிதாபம்

அம்பாறை தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம்  மொரகஹப்பள்ளம் பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்