24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
இலங்கை

தமிழ் தேசிய வாழ்வுரிமை கட்சியின் ஏற்பாட்டில் கூட்டம்

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் மன்ற கூட்டமொன்று அதன் தலைவர் வி.எஸ். சிவகரன் தலைமையில் யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப் பொருளில் இவ் மக்கள் மன்றம் இடம்பெற்றது.

இதன் போது தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து வெள்ளயிட்டிருந்தனர்.

இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சுயேட்சைக் குழுவின் சார்பில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணண், ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் என்.சிறிகாந்தா ஆகியோர் அரசியல் பிரதிநிதிகளாக கலத்து கொண்டிருந்தனர்.

இதே போன்று சிவில் சமூகத்தின் சார்பில் அருட்தந்தை ஜெயக்குமார் அடிகளார், யாழ் பல்கலைக்கழக அரசறிவியல்துறை விரிவுரையாளர் கலாநிதி விக்னேஸ்வரன், சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

இக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் வேட்பாளர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

மாணவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் சாத்தியம்

east tamil

தரம் 5 புலமைப்பரிசில் விடைத்தாள் குறித்து வெளியான மதிப்பீட்டு தகவல்

east tamil

சுற்றுலா பறவைகளை கொன்று வியாபாரம் செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

east tamil

வடக்கு மாகாணத்தில் சீரான பரம்பலின்மை – ஆளுநர் நா. வேதநாயகம்

east tamil

Leave a Comment