27 C
Jaffna
January 24, 2025
Pagetamil
இலங்கை

அபுதாபியின் மிகப்பெரிய அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் முதற்பரிசு வென்ற இலங்கையர்: ஒரே இரவில் கோடீஸ்வரர்!

அபுதாபியின் பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா தொடரில் 227 அதிர்ஷ்டசாலியாக இலங்கையின் முகமது மிஷ்பாக் தெரிவாகியுள்ளார். 12 மில்லியன் திர்ஹாம் (3.3 மில்லியன் அமெரிக்க டொலர்) வென்றுள்ளார்.

இலங்கையை சேர்ந்த முகமது மிஷ்பாக் டுபாயில் தொழில் நிமித்தம் தங்கியிருக்கிறார். தற்போது இலங்கைக்கு விடுமுறையில் வந்துள்ளார்.

அபுதாபியின் மிகப்பெரிய அதிர்ஷ்டலாப சீட்டிழுப்பு நிகழ்ச்சியான பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா தொடரின் டிக்கெட் ஒன்றை ஏப்ரல் 29 அன்று வாங்கியுள்ளார். அவரது டிக்கெட் எண் 054978 வெற்றியிலக்கமாக இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

“இப்போது, நான் இலங்கையில் இருக்கிறேன். நான் விடுமுறையில் இருக்கின்றேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை ”என்று மிஷ்பக் கூறியுள்ளார்.

மிஷ்பாக்கைத் தவிர, மேலும் இருவர் மில்லியனர்களாக பரிசு வென்றனர். அவர்கள் இருவரும் இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் அபுதாபி சென்றவர்கள். ஒருவர் 3 மில்லியன் திர்ஹாமும், மற்றையவர்  1 மில்லியன் திர்ஹாமும் வென்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

வாகன விபத்துகளால் கடந்த 24 மணித்தியாலத்தில் நால்வர் பலி

east tamil

சலோச்சன கமகே பிணையில் விடுவிப்பு

east tamil

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம்: சீ.வீ.கே. நன்றி!

Pagetamil

கடவுச்சீட்டு தொடர்பில் சஜித் பிரேமதாச பாராளுமன்ற கேள்வி

east tamil

திருடிய இடங்களில் “BATMAN” என எழுதி வைத்த திருடன் சிக்கியது எப்படி?

Pagetamil

Leave a Comment