28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான வானிலை எச்சரிக்கை

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய-கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர், இந்த அமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒக்டோபர் 23ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிக பலத்த காற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீற்றர்) வீசக்கூடும் என்றும் அந்த கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

தடாகத்தில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

east tamil

அர்ச்சுனாவுக்கு வைக்கப்பட்ட பெரும் ஆப்பு: நேற்று நீதிமன்றத்தில் வெளிப்பட்ட தகவல்!

Pagetamil

Leave a Comment