தோல்வியடைந்த எம்.பிக்களுக்கு தமிழரசின் வேட்புமனுவில் இடமில்லை

Date:

நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவிவகித்து தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லையென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று (28) வவுனியாவில் நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய செயற்குழு கூட்டத்தில் இதற்கான யோசனையை கட்சியின் சிரேஸ்ட தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் முன்வைத்தார்.

“நமது அரசியலில் மாற்றம் வர வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்தலில் புதியவர்கள்- இளையவர்கள் போட்டியிட வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பு. அதை உணர்ந்து செயற்பட வேண்டியது கட்சியிலுள்ள ஒவ்வொருவரின் கடமை. புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.பிக்கள் மற்றும் ஏனையவர்கள் இம்முறை போட்டியிடாமலிருக்க வேண்டும்“ என்றார்.

இதன்போது சேனாதிராசா கலையமுதன் குறுக்கிட்டு, “அப்படி வாய்ப்பளிக்கப்படாதவர்கள் மாகாணசபை, உள்ளூராட்சிசபைகளில் போட்டியிட முயல்வார்கள். அந்த தேர்தல்களிலும் அவர்கள் போட்டியிடக்கூடாது“ என்றார்.

இருவரும் யோசனையும் மத்திய செயற்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்