26.3 C
Jaffna
December 17, 2024
Pagetamil
சினிமா

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக; .ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பானமையுடன் வெற்றி பெற்றுள்ள திமுகவிற்கு ட்விட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் 20,000 பேருக்கு மேல இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா? நீங்களே பாருங்க
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவுள்ளது. பத்தாண்டுகள் கழித்து தமிழகத்தின் ஆட்சி கட்டிலில் அமர இருக்கும் திமுகவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

கடந்த மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. ஆளும் கட்சியான அதிமுகவை வீழ்த்தி, முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின். அவருக்கு பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள திமுகவிற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! என பகிர்ந்துள்ளார்.

அவரின் இந்த வாழ்த்திற்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின், அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில், இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சட்டமன்ற வெற்றி சான்றிதழை பெற்ற திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று நள்ளிரவிலே மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றார். வரும் வெள்ளிக்கிழமை திமுக தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையாக தங்களுடைய பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவித்துள்ளார் மு.க. ஸ்டாலின்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

Leave a Comment