தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார் எனவும், பீதியடைய எந்த காரணமும் இல்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
1.3 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார வெற்றி பெற்றுள்ளதாகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணுவது இறுதி முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
வேட்பாளர்கள் எவரும் 50 சதவீதத்திற்கு மேல் பெறாததால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.
வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கு மேல் பெறத் தவறினால், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை தேர்தல் சட்டத்தின்படி கணக்கிடப்பட வேண்டும். இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது, இறுதி முடிவுகள் சில மணி நேரத்தில் அறிவிக்கப்படும்,” என்றார்.
திஸாநாயக்க வெற்றி உறுதிசெய்யப்பட்டதையடுத்து, ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான நிகழ்வில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சமந்த வித்யாரத்னவின் கூற்றுப்படி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தனது முதல் நிர்வாக நடவடிக்கையாக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் 15 அமைச்சு செயலாளர்களை தற்காலிகமாக நியமிப்பார்.