25.5 C
Jaffna
January 20, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் 68.66 வீத வாக்களிப்பு

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்துள்ளது.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 68.66 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருப்பதாக தெரிவத்தாட்சி அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய தினம் 69,287 பேர் வாக்களித்துள்ளனர்.

ஏற்கனவே நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பினை உ ள்ளடக்கியதாக கிளிநொச்சி மாவட்டத்தில் மொத்தமாக 72.4 வீதமான வாக்கு பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் வாக்களிப்பு மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

இவர்களுக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இத்தேர்தல் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,734 அரச உத்தியோகத்தர்கள், 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் அரசியலை ஒழிக்க உறுதி – ஜனாதிபதி

east tamil

மருந்து உற்பத்தி விரைவில் அதிகரிக்கும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

east tamil

யாழில் சுழல் காற்றால் 48 குடும்பங்கள் பாதிப்பு

Pagetamil

விசாரணையின் பெயரில் அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு

east tamil

Update: மன்னார் துப்பாக்கி சூட்டு சம்பவம்

east tamil

Leave a Comment