எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு எடுத்த தீர்மானம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நிலைப்பாடு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட கட்சியின் 6 பேர் கொண்ட குழு இன்று (16) வவுனியாவில் கூடி இந்த முடிவை எடுத்தது.
6 பேர் கொண்ட குழுவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட 5 பேர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முடிவை ஆதரித்தனர். சி.சிறிதரன் மாத்திரம் இந்த முடிவில் உடன்படவில்லை.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1