பொலிஸாரின் அச்சுறுத்தலுக்குள்ளானவர் சில மணி நேரங்களில் காயமடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் மந்திகை ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் என்பவரே காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வீட்டு உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக ஏற்பட்ட தகராறு தொடர்பாக பொலிஸாரிடம் ஒரு தரப்பால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்பட்ட பிரதேசசபை உறுப்பினரை அங்கிருந்து வெளியேறுமாறு நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி கண்டிப்பாக தெரிவித்ததுடன், அவரது வீட்டு உடைமைகளை தூக்கி எறிந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் அச்சுறுத்தல் தொடர்பாக பிரதேசசபை உறுப்பினர் காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது கையில் இரத்தம் வழிந்ததாகவும், பின்னர் கவனித்த போது வயிற்றில் பெரிய காயமிருந்ததாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்தார்.
காயமடைந்தவர் நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காயமடைந்தவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1