25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
இலங்கை

ரூ.2500 பணம்… சாப்பாட்டு பார்சல்… உற்சாக பானம்: களை கட்டும் பொதுவேட்பாளர் பிரச்சாரம்!

தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு மதுபானம் உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் பொதுவேட்பாளராக பா.அரியநேந்திரனை களமிறக்கி, சில புலம்பெயர் தரப்புக்களும், யாழ்ப்பாணத்தில் கட்டுரைகள் எழுதுபவர்களும் செயற்பட்டு வருகிறார்கள்.

பொதுவேட்பாளர் பிரச்சார பணிக்காக புலம்பெயர் அமைப்புக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதுதவிர லைக்கா நிறுவனம் உள்ளிட்ட பெரு முதலாளிகளும் பண உதவி செய்துள்ளனர்.

பெரும் பணம் புரளத் தொடங்கியதையடுத்து, தமிழ் பொதுவேட்பாளர் தரப்பு பெருமெடுப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பொதுவேட்பாளர் பிரச்சாரத்துக்காக யாழ்ப்பாணம், ஆசிர்வாதம் வீதியில் அலுவலகமொன்று திறக்கப்பட்டுள்ளது. அங்கு சம்பளத்துக்காக 5 பேர் பணியமர்த்தப்பட்டு, தேர்தல் விவகாரங்களை கண்காணித்து வருகிறார்கள்.

தொகுதி ரீதியாக பிரச்சாரம் முன்னெடுக்க கட்சிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. தொகுதி பிரச்சாரத்தை வழிநடத்துபவர்கள் பட்ஜெட் ஒன்றை தயாரித்து வழங்கினால், அதன்படி பணம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் பக்கம் அறிந்தவரை, அனேகமான ஏற்பாட்டாளர்கள், பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களின் இரண்டு மடங்கு தொகையை காண்பித்து பணம் பெற்று வருகிறார்கள். சில பகுதிகளில் ஏற்பாட்டாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக தினமும் ரூ.100,000 வரை பெற்றுள்ளனர்.

பணம் வழங்கப்படாமலிருந்த நிலையில், அண்மைய நாட்கள் வரை பிரச்சாரம் மந்த கதியில் இருந்தது. தற்போது பணம் தாராளமாக இறைக்கப்பட, பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

தற்போது வடக்கு கிழக்கின் அனைத்து பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களும் நாளாந்த சம்பளத்தின் அடிப்படையிடையிலேயே ஆட்களை களமிறக்கியுள்ளனர்.

பகலில் பிரச்சாரத்தில் ஈடுபடுபம் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2500 சம்பளமும், தேநீர் மற்றும் குடிபானத்துக்காக ரூ.700 கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

இரவில் சுவரொட்டி ஒட்டுவது உள்ளிட்ட பிரச்சார பணியில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.2500 சம்பளமும், தேநீர் போன்ற செலவுக்காக ரூ.500 உம் வழங்கப்படுகிறது.

இதுதவிர, இரவில் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மது அருந்துவதெனில் அதற்கும் வசதியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செலவை- மேலதிக செலவு என குறிப்பிட்டு கணக்கு காண்பிக்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது.

பிரச்சார பணிகளை ஒருங்கிணைக்க வட்ஸ்அப் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் ஆரம்பிக்கும் சமயத்தில் புகைப்படம் எடுத்து, ஏற்பாட்டாளர்கள் அதனை குழுவில் பதிவேற்றி விடுகிறார்கள்.

கடற்றொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளும் அண்மைய நாட்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதன் பின்னணி இதுதான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment