26.3 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இலங்கை

வக்காளர் அட்டை விநியோகிக்க சென்றவரை தாக்கியவர் கைது

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வாக்களர் அட்டை விநியோகிப்பதற்காக சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஊழியரை மறித்து தகாத வார்த்தைப் பிரயோகங்களை கொண்ட குறித்த சந்தேகநபர், வாக்காளர் அட்டைகளையும் பறிக்க முற்பட்டுள்ளார்.

குறித்த வாக்காளர் அட்டைகளை தீ மூட்டுவேன் எனவும், குறித்த ஊழியரை அச்சுறுத்தும் வகையிலும் அச்சந்தேகநபர் முயன்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி தபாலதிபருக்கு தகவல் வழங்கியதுடன், பொலிசாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உள்நாட்டு தேங்காய் எண்ணெய்க்கு 18% வரி – அரசின் மீது கடும் விமர்சனம்

east tamil

அரச அச்சுத் திணைக்கள உத்தியோகபூர்வ இணையத்தளம் வழமைக்கு திரும்பியது

east tamil

குளவி தாக்குததால் வைத்தியசாலையில் பரபரப்பு – 11 பேர் மீது குளவி கொட்டு

east tamil

இந்திய மீனவர்களுக்காக விளக்கமறியல் மேலும் நீடிப்பு

east tamil

பாதுகாப்பு அமைச்சில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய

east tamil

Leave a Comment