26.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

மறுபடியும் முதல்லயிருந்தா?… ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாட்டை தீர்மானிக்க தமிழ் அரசு கட்சி மீண்டும் கூடுகிறது!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானம் எடுத்து பகிரங்கமாக அறிவித்து 10 நாட்களின் பின்னர், நாளை இலங்கை தமிழரசு கட்சியின் பிரமுகர்கள் கூடி, ஜனாதிபதித் தேர்தலில் எடுக்கவுள்ள நிலைப்பாடு குறித்து ஆராயவுள்ளனர்.

எதிர்வரும் 14ஆம் திகதி மத்திய செயற்குழு கூட்டம் 14ஆம் திகதி கூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விசித்திர நிலைமையினால் தாம் மிகுந்த குழப்பமடைந்துள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித்  தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து கட்சியின் மத்தியகுழுவுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. கடந்த 18ஆம் திகதி நடந்த மத்தியகுழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சித்தலைவர் மாவை சேனாதிராசா, பதில் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கம், மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பின்னர், கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தி.சரவணபவன் நியமிக்கப்பட்டார்.

எனினும், இந்த குழு கூடாமல், கடந்த 1ஆம் திகதி இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில், ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனினும், இந்த கூட்டத்தில் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. தாம் கலந்துகொள்ளாத கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதை தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது பற்றி ஆராய நியமிக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழு நாளை (10) வவுனியாவில் கூடவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எடுக்கவுள்ள நிலைப்பாடு குறித்து இதன்போது ஆராயப்பட்டு, கட்சியின் மத்தியகுழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதை தொடர்ந்து, 14ஆம் திகதி கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் மாவை சேனாதிராசாவின் வீட்டுக்கு சென்றிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ரணில் அரசிடமிருந்து வர்த்தக அனுகூலமொன்றை பெற்றதாக அரசியல், சமூக ஊடக வட்டாரங்களில் அரசல்புரசலாக பேச்சடிபடுகிறது. இந்த பின்னணியில், சஜித் ஆதரவு நிலைப்பாடு எடுத்த பின்னரும், ஜனாதிபதித் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆராய கட்சியின் 6 பேர் கொண்ட குழு நாளை கூடவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே; பேச்சாளர் சுமந்திரன்; பலர் நீக்கம்!

Pagetamil

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

Leave a Comment