26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

குளங்களை பாதுகாக்க எல்லை கற்கள் தயாராக உள்ள போதும் திணைக்களம் தயாரில்லை – பொது மக்கள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான
குளங்களை பாதுகாக்கும் பொருட்டு அவற்றிற்கு எல்லை கற்கல் இட்டு
அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எல்லை கற்கள் கொள்வனவு செய்யப்பட்டு
தயாராக உள்ள போதும் அவற்றினை கொண்டு குளங்களுக்கு எல்லையிடுவதற்கு
நீர்ப்பாசனத் திணைக்களம் தயாராக இல்லாதிருப்பது கவலையளிக்கிறது என பொது
மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் சில குளங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு
வருகிறது.இதில் கிளிநொச்சி குளம் அதன் பின்பகுதியில் பெருமளவுக்கு
ஆக்கிரமிக்கப்பட்டு மதில்கள் அமைக்கப்பட்டு கட்டடங்களும்
கட்டப்பட்டுவிட்டன. கனகாம்பிகைகுளம் அதன் பின்பகுதியில் ஒட்டுசுட்டான்
பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 25 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிது புதிதாக சிலர் மண் நிரப்பி குளங்களை ஆக்கிரமித்து
வருகின்றனர். இது எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தம் உட்பட மிக மோசமான
சுற்றுச் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தும், அருகிச் செல்லும் நிலத்தடி
நீரையும் இல்லாது செய்துவிடும் எனவே இதனை கருத்தில் எடுத்து குளங்களை
பாதுகாக்க வேண்டும்

அதற்கமைவாக குளங்களுக்கு எல்லையிடுதல் அவசியமாகும். வனவளத்திணைக்களம்
தங்களின் காடுகளை பாதுகாக்க எல்லை கற்களை பதித்தது போன்று
குளங்களுக்கும் எல்லை கற்களை பதிக்க வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக
கற்கள் தயார் நிலையில் உள்ள போதும் திணைக்களம் நடவடிக்கை
எடுக்காதிருப்பது கவலைக்குரியது. எனவே இனியாவது குளங்களை பாதுகாக்கும்
அக்கறையுடன் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள்
கோரியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை பொருளாதார உச்சி மாநாடு

east tamil

Leave a Comment