இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹம் தோர்ப் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்தார்!

Date:

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரஹம் தோர்ப் கடும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

55 வயதாகும் கிரஹம் தோர்ப் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று உயிரிழந்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ஓகஸ்ட் 4 ஆம் திகதி, சர்ரேயில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சூழலில், சில ஆண்டுகளாக கடும் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த கிரஹம் தோர்ப், தற்கொலை செய்துகொண்டதாக தற்போது கிரஹாமின் இரண்டாவது மனைவி அமாண்டா தோர்ப், தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “அவரது அன்புக்குரிய மற்றும் அவரை நேசிக்கக்கூடிய மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தும் அவர் சரியாகவில்லை. அண்மைக் காலமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் இல்லாமல் போனால்தான் நாங்கள் நன்றாக இருப்போம் என்று அவர் உண்மையிலேயே நம்பத் தொடங்கி இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக கடும் மன அழுத்தம் மற்றும் உளைச்சலால் அவதிப்பட்டு வந்த கிரஹம், 2022ஆம் ஆண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு நீண்டநாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நிலை ஏற்பட்டது.

ஒரு குடும்பமாக அவருக்கு எல்லாவகையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள நாங்கள் முயற்சிகள் எடுத்தோம். ஆனால் அவை எதுவுமே பலனளிக்காமல் போய்விட்டது.” இவ்வாறு அமாண்டா தெரிவித்தார்.

கிரஹம் தோர்ப், தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் 100 டெஸ்ட் மற்றும் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 1993 மற்றும் 2005க்கு இடையிலான 13 ஆண்டுகள் அவரது கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்தில் இருந்தது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்