3 பேரை சுட்டுக்கொன்று விட்டு பொலிஸ்காரர் தற்கொலை!

Date:

அம்பாறை, இகினியாகல நாமலோய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றுமொரு கான்ஸ்டபிளையும், தனது மனைவி, மாமியாரையும் சுட்டுக் கொன்றுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. மொனராகலை கரடுகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கரடுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்காரர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு, நாமலோயா பொலிஸ் நிலையத்துக்கு சென்ற கொலையாளியான பொலிஸ்காரர், தனது மனைவி, மாமியாரை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வந்தபோது அவர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடி விட்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கள்ளக்காதல் விவகாரத்தினால் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்