பெரமுனவின் கறார் தீர்மானம்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கையொப்பமிட்டு வௌியிடப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மொட்டு கட்சியின் ஒரு தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும், அது தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று சாகர காரியவசம் எந்தக் கடிதம் அனுப்பினாலும் அஞ்சப்போவதில்லை, எனவும் ஜனாதிபதி இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவையினால் தான் நாங்கள் தீர்மானங்களை எடுத்தோம் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்