நோய்வாய்ப்பட்ட இலங்கை மீனவர் மீட்பு

Date:

நடுக்கடலில் நோய்வாய் பட்டு மயங்கி நிலையில் இருந்த இலங்கை மீனவரை நாகை சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி இரவு 11 மணிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி மதியம் 12 மணி அளவில் வேளாங்கண்ணிக்கு நேர் கிழக்கே 350 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கையை சேர்ந்த ஒரு பைபர் படகில் மீனவர் ஒருவர் மயங்கி நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரை படகுடன் பத்திரமாக மீட்டு இன்று காலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர் அங்கிருந்து பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர் சிகிச்சைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

அவரைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட மீனவர் திருகோணமலையை சேர்ந்த அகமது இர்ஃபான் வயது 41 மற்றும் அதே ஊரை சேர்ந்த அகஸ்டின் என்பவரும் கடந்த 20 நாளைக்கு முன்பு திருகோணமலையிலிருந்து மீன்பிடிக்க சென்றதும் அப்போது அகமது இர்ஃபானுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நடுக்கடலில் தத்தளித்ததும் தெரியவந்தது

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஆசிய கடற்பரப்பில் 3 ஈரானிய கப்பல்களை இடைமறித்துள்ள அமெரிக்க கடற்படை

ஆசியக் கடற்பரப்பில் ஈரான் கொடியுடன் சென்ற குறைந்தது மூன்று எண்ணெய்க் கப்பல்களை...

காணாமல் போன 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து நிதி அமைச்சகமும், மத்திய வங்கியும் ஏன் மௌனம் காக்கின்றன?: ஹர்ஷ கேள்வி

பொது நிதிக்கு அரசியலமைப்பு ரீதியாகப் பாராளுமன்றமே பொறுப்பு என்று கூறி, பொது...

அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டிய கடன் இணையத்திருடர்களிடம் சென்ற விவகாரம்: நிதியமைச்சு விசாரணைக்குழு நியமித்தது!

அவுஸ்திரேலியக் கடனுக்கான தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்