கிண்ணியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 37 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Date:

திருகோணமலை கிண்ணியா வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட கிண்ணியா அல்-அக்சா தேசிய பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 37 மாணவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் இன்று (30) காலை இடம் பெற்றதாக தெரிய வருகிறது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது…

பாடசாலை வளாகத்தில் குளவி கூடு ஒன்று இருந்ததாகவும் குறித்த குளவி கூடு கலைந்தமையினால் இவ்வாறு மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வாறு குளவி கோட்டுக்கு இலக்கான 21 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் ஏனைய மாணவர்கள் தொடர்ந்தும் கிண்ணியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பாடசாலையில் கடந்த சில தினங்களாக பாடசாலை தொழில்நுட்பக் கூடத்திற்கு அருகாமையில் காணப்பட்ட குளவி கூடு ஒன்று கலைந்தமையினால் பாடசாலை மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-ரவ்பீக் பாயிஸ் –

Share post:

spot_imgspot_img

More like this
Related

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...

முள்ளிவாய்க்கால் அவலம்: 17 வருடங்களின் பின் மே மாதத்தில் மஹிந்த குடும்பம் கண்ணீர் விடுகிறது!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் போது தமிழ் மக்கள் விட்ட கண்ணீர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்