28.4 C
Jaffna
February 1, 2025
Pagetamil
கிழக்கு பிரதான செய்திகள்

மட்டக்களப்பு நகரின் ஒரு பகுதி முடக்கம்!

மட்டக்களப்பு நகர் திஸவீரசிங்கம் பிரதேச பகுதி தனிமைப்படுத்தப்பட்டது: அங்கு 24 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகர் பகுதி திஸவீரசிங்கம் சதுக்கத்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட மூன்று குறுக்கு வீதிகள் உட்பட்ட பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

அந்த பகுதிக்கு போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திஸவீரசிங்கம் பகுதியில் நோயாளி ஒருவர் இனங்காணபட்டதை அடுத்து எழுந்தமானதாக 24 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் 11 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்ட தை தொடர்ந்து இந்த முடக்க நிலை அறிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 32 பேர் இனங்காணப்பட்டனர். 12 பேர் மட்டக்களப்பு பிரதேச செயலக பிரிவு, 4 பேர் களுவாஞ்சிக்குடி, 8 பேர் ஓட்டமாவடி, 5 பேர் ஏறாவூர், 2 பேர் வாழைச்சேனை, ஒருவர் பொலிசார் உட்பட்ட 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

திருகோணமலை சர்வோதயம் அருகில் விபத்து

east tamil

இறக்கக்கண்டியில் இலவச மருத்துவ முகாம்

east tamil

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஊழலை விசாரிக்க குழு நியமனம்

east tamil

திருகோணமலை கடற்கரையில் சடலம் மீட்பு

east tamil

கிழக்கு மாகாண ஆளுநருடன் கணக்காய்வு அதிகாரிகளின் சிறப்பு கலந்துரையாடல்

east tamil

Leave a Comment