‘இயக்கத்தின் பணத்தில் வீடு கட்டுகிறீர்களா?…’; யாழில் குடும்பப் பெண்ணின் கையில் விலங்குமாட்டி பணம் பறித்த கும்பல்: சிஐடியென கூறி கைவரிசை!

Date:

யாழ்ப்பாணத்தில் தம்மை சிஐஎ பொலிசார் என கூறி, பெண்ணாருவரின் கையில் விலங்கு மாட்டி, மிரட்டி பணம் பறித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 23ஆம் திகதி இந்த பணம் பறிப்பு சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணம், கன்னாதிட்டி வீதியில் வசிக்கும் பெண்ணொருவரிடமிருந்தே பணம் பறிக்கப்பட்டது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசிக்கிறார். அவர்கள் அண்மையில் புது வீடொன்று கட்டியுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சிவில் உடையில் சென்ற இருவர், தம்மை சிஐடி பொலிசார் என குறிப்பிட்டு, அவரது கணவரினால் அனுப்பப்பட்ட பணம் விடுதலைப் புலிகளின் பணம் எனவும், அவரை கைது செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டு, அந்த பெண்ணின் கையில் கைவிலங்கிட்டுள்ளனர்.

அவரை கைது செய்யாமல் விடுவதாயின் ரூ.8 இலட்சம் தருமாறு மிரட்டியுள்ளனர். இறுதியில் அந்தப் பெண் ரூ.3 இலட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.

பின்னர், சந்தேகமடைந்த அந்தப் பெண், இது குறித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்திய பொலிசார், இளவாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரை இன்று கைது செய்துள்ளனர். அவருக்கு உடந்தையாக செயற்பட்ட ஒருவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் கடமையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது.

 

23.07.2024 அன்று யாழ்ப்பாணம் பொலிஸ் சில். கன்னதிட்டி வீதியில் யாழ்ப்பாண வசிக்கும் செபமாலை உதயகுமார் என்பவரது வீட்டிற்கு, சென்ற இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி செபமாலை உதயகுமார்ரின் மனைவியிடம் உங்களின் வெளிநாட்டில் உள்ள புருசன் அனுப்பிய பணம் LTTE பணம்த்தில் தான் வீட்டை கட்டியதாக மிரட்டி உங்களை கைது செய்ய போறோம் என கூறி 300000/= பணம் பறித்து சென்றார்கள். அதன் பிரகாரம் இளவாலையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றவர் பொலிஸ் உத்தியோகத்தர் அவர் விரைவில் கைது செய்யப்படுவார்

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்