முல்லைத்தீவு துணுக்காய், மாந்தை கிழக்கு மக்களிற்கு அவசர அறிவித்தல்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ள நிலையில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை மல்லாவி மற்றும் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகார பணிமனை விடுத்துள்ளது

இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

எமது நாட்டில் கொரோனா தற்சமயம் வேகமாக பரவுகின்றமை யாவரும் அறிந்த விடயம். தற்போது எமது பிரதேசத்திலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே சகல விழாக்கள், நிகழ்வுகள் ஒன்று கூடல்கள்,தனியார் வகுப்புகள் மற்றும் சமய ஆராதனைகளை உடனடியாக நிறுத்துவதுடன் சுகாதார நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்குமாறும் தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வைத்தியசாலையில் பணியாற்றும் கொல்லவிளாங்குளம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு கொழும்பில் மேசன் வேலைக்கு சென்று திரும்பிய ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பொதுமகன் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்