வவுனியாவில் 21பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 15 பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் மற்றும் தென்பகுதிகளை சேர்ந்த பலர் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு நேற்று பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்ததுடன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் 15 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவு, மற்றும் செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, வவுனியா வைத்தியசாலை ஆகியவற்றில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 6 தொற்றாளரகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.