சம்பிக்க விபத்து வழக்கில் பொலிசாரின் நடத்தை சட்டவிரோதம்: இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Date:

2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் சட்டவிரோதமாகச் செயற்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வாகன சாரதியை கண்டுபிடிப்பதற்காக பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியின் மனைவி, அவர்களது குழந்தை மற்றும் சாரதியின் மாமியார் ஆகியோர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பதில் பணிப்பாளர் நெவில் சில்வா மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் மெத்தானந்த ஆகியோர் சட்டவிரோதமாக கைது செய்தமை மற்றும் சாரதியின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு அதிகாரிகளும் மனுதாரருக்கு தலா ரூ.250,000 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், மனுதாரருக்கு இழப்பீடாக அரசு ரூ. 10,000  வழங்கவும் உத்தரவிட்டது.

அத்துடன், இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையைத் தொடங்குமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்