அழகிய கண்களை மேலும் அழகாக்க பெண்கள் ஆதி காலத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தி வரும் முக்கிய அழகு சாதனம் காஜல். இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், 5000 ஆண்டுகள் முன்னர் தோன்றிய கண்மை அதாவது இந்த காலத்தில் காஜல் என்று அழைக்கப்படும் இந்த அழகுப்பொருள் இன்று வரை அதே முக்கியத்துவத்துடன் இருந்து வருகிறது. உலகத்தில் முதன் முதலாக பெண்களால் பயன்படுத்தப்பட்ட, முதல் அழகுப்பொருள் கண் மை தான். காஜல் கண்களுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் மாசிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
ஆனால் இப்பொது கடைகளில் கிடைக்கும் காஜல் சீக்கிரமாக கண்களில் இருந்து அழிந்து விடுகின்றன. அதேபோல, சிறிது நேரத்திலேயே கண்களில் இருந்து மை ஒழுக ஆரம்பித்து விடும். இதனால் கண்கள் முழுவதுமாக மை நிறைந்து முகத்தின் அழகு சீர்குலைந்து விடும். நீங்கள் வைக்கும் மை நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்க சில எளிய வழிகள் உள்ளன. எனவே, உங்கள் கண்களில் மை தடவுவதற்கு முன்பு இந்த ட்ரிக்ஸா கட்டாயம் பாலோ பண்ணுங்க.
முகத்தை சுத்தம் செய்யுங்கள்:
உங்கள் கண்களில் காஜலைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் முகத்தை சரியாக சுத்தம் செய்யுங்கள். ஃபேஸ் வாஷ் மூலம் கழுவி, உலர வைக்கவும்.
காஜலை பயன்படுத்துங்கள்:
மென்மையான கையால் உங்கள் கண்களில் காஜலைப் பயன்படுத்துங்கள்.
ஐ ஷேடோவுடன் பின்தொடரவும்
உங்கள் காஜல் மழுங்கி போவதை தடுக்க விரும்பினால், காஜல் வைத்த பின்பு ஐ ஷேடோவை வைக்கவும்
பேஸ் பவுடர்
அடுத்து, கண்களைச் சுற்றி சில பேஸ் பவுடர்களை பயன்படுத்துங்கள். இது ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
காஜலைப் பயன்படுத்திய பிறகு உங்கள் கண்களைத் தொடாதீர்கள் அல்லது தேய்க்க வேண்டாம். உங்களது கண் இமைகள் எண்ணெய் வழியும் வகையாக இருந்தால், அவற்றை பருத்தி கொண்டு சீரான இடைவெளியில் துடைத்து விடுங்கள்.
இப்பொது கடைகளில் கிடைக்கும் காஜல் சீக்கிரம் அழியாமல் இருக்க பல செயற்கை ரசாயனப் பொருள்கள் அதிகளவில் கலந்த காஜலைச் சிலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அதில் லெட் சல்பேட் போன்ற ரசாயனம் கலந்திருப்பதால் கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். செயற்கையான காஜல் எதுவுமே கண்களுக்கு நன்மையைத் தராது.
இந்தப் பாதிப்புகளைத் தவிர்க்க வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம். கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்துக் காய்ந்த, காட்டன் திரியை நல்லெண்ணெய் ஊற்றிய விளக்கில் எரியவிடவும். அந்த விளக்கின் மேல் பகுதியில் குமிழ் போன்ற பாத்திரத்தைப் பாதி திறந்த நிலையில் வைக்கும்போது, அதில் கரித்துகள் படியும். இதை பேஸ்ட் மாதிரி எடுத்து வைத்து, அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து பயன்படுத்தினால் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும். பக்க விளைவுகளும் கிடையாது. காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். செயற்கையான ரிமூவர்ஸில் ஆல்கஹால் அதிகமாக இருக்கும். ஆல்கஹால் இருந்தால்தான் காஜல், மஸ்காரா, ஐ ஷேடோவை முழுமையாகச் சுத்தப்படுத்த முடியும். ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.