முன்னணி ஆக்‌ஷன் ஹீரோவுடன் கைக்கோர்க்கும் ப்ரியா பவானி சங்கர்..

Date:

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சக்ரா. அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கிய இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தனர். ஆக்ஷன் படமான இது சுமாராகவே போனது. இதையடுத்து ஆர்யாவுடன் எனிமி படத்தில் விஷால் நடித்தார். சமீபத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டன. அரிமா நம்பி, இருமுகன் படங்களின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து விஷால் நடிக்கும் படம் குறித்து தெரியவந்துள்ளது.


பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். இதில் அவருடன் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்த அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இந்தப் படத்தை இயக்குகிறார். அடங்க மறு போலவே ஆக்ஷன் அதிரடியுடன் இந்தப் படம் உருவாக உள்ளது.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் சரியாகப் போகவில்லை. அயோக்யா, ஆக்ஷன், சக்ரா மூன்றும் பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றத்தை சந்தித்தன. ஒரு வெற்றி அவசியம் என்ற நிலையில் எனிமி படத்தில் ஆர்யாவுடன் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கம் என்பதால் அனைவரும் படத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனிமி தொடர்ந்து அடங்கமறு இயக்குநருடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். விஷாலின் திரைவாழ்க்கை மீண்டும் வெற்றியை நோக்கி திரும்பியிருக்கிறது எனலாம்.ஜுனில் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

1 பில்லியன் டொலர் மோசடி! சில வங்கிகள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்

நாட்டுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு; சில வங்கிகளுக்கு தொடர்பு...

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்