இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

Date:

இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை கொன்று எரியூட்டுவதாக இனந்தெரியாத நபர் ஒருவர் விடுத்த அச்சுறுத்தல் தொடர்பில் கோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புதன்கிழமை மாலை 4 மணிக்கும் 4.09 மணிக்கும் இடையில் தனக்கு இந்த தொலைபேசி அழைப்பு வந்ததாக நிதி அமைச்சின் முகாமைத்துவ உதவியாளர் மற்றும் அலுவலக ஊழியர் ஒருவரும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த அலுவலக உதவியாளர் பிரதான தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மாலை 4 மணியளவில் வந்த அழைப்பிற்கு பதிலளித்துள்ளார். அரச நிதியமைச்சர் இல்லை என அலுவலக உதவியாளர் கூறிய போது, குறித்த நபர் அரச நிதி அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

“தேர்தலின் போது உங்களுக்கு உதவியவர்கள் நாங்கள்தான், அவரை கொழும்பில் இருக்கச் சொல்லுங்கள், இனி இங்கு வர வேண்டாம், வந்தால் உயிரைக் எடுத்துவிடுவேன்” என்று அலுவலக உதவியாளரிடம் அந்த நபர் கூறியிருந்தார். ஒன்பது நிமிடங்களுக்குப் பின்னர் இராஜாங்க அமைச்சரை அச்சுறுத்தும் வகையில் மற்றுமொரு அழைப்பு அலுவலகத்திற்கு வந்ததாக அவர் கூறியிருந்தார். இந்த நேரத்தில் ஒரு நிர்வாக உதவியாளர் போனை எடுத்தார்.

விசாரணைகள் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாகவும், தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்று விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்