ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரிகளான 3 யுவதிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நிகழ்ந்தது.
கதிர்காமம் தெட்டகமுவ பகுதியில் கடந்த 10ஆம் திகதி இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.
23 வயதான திலும் விந்தியா, கெயுமி திசாரா, வித்மி ஹன்சா ஆகிய மூன்று யுவதிகளும், வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷ மதுஷன், ரன்ன நெடோல்பிட்டியவைச் சேர்ந்த கலப்பிட்டி வடுகே பிரேமச்சந்திர மற்றும் லுணுகம்வெஹெரவை சேர்ந்த விக்கிரமசிங்க சின்ஹாராச்சி கசுன் ஆகியோரை திருமணம் செய்தனர்.
பல நாட்களாக தனது மகள்களின் திருமண கொண்டாட்டங்களில் மும்முரமாக செயற்பட்டதால் தற்போது களைப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ள தந்தை சுஜித் நிஷாந்த, எனது மூன்று மகள்களும் ஒன்றாக திருமணம் செய்தது மகிழ்ச்சியானது என்றார்.
ஒரே சூழில் பிரசவித்த சகோதரிகளான அவர்கள், கதிர்காமம் தேசிய பாடசாலைக்கு ஒன்றாகச் சென்றார்கள்.
“சரியான நேரத்தில், மூன்று நல்ல மகன்களைக் கண்டுபிடித்து அவர்களின் விருப்பப்படி திருமணம் செய்து வைத்தோம். இந்த மூவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்ததில் எனக்கும் என் மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சி. 23 வருடங்கள் கண் போல் வளர்த்த குழந்தைகளை திருமணம் செய்து வைப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அவர்களை பிரிவது வருத்தமாகவும் இருக்கிறது“ என தாயார் பி.எம்.கே.இந்திராணி தெரிவித்தார்.