24.9 C
Jaffna
January 25, 2025
Pagetamil
இலங்கை

டயானாவை விடாது விரட்டும் வழக்குகள்!

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு வாய்ப்பைப் பெற்றுக் கொண்டு சுமார் பத்து இலட்சம் ரூபாவை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. .

இது தொடர்பில், தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்கவிடம் வினவிய போது, ​​கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

நிலுவைத் தொகையை வழங்குமாறு டயானா கமகேவுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அவர் அதனை செலுத்தத் தவறியதாகவும் தலைவர் தெரிவித்தார்.

நவகமுவ பெரஹராவை நேரடியாக விளம்பரப்படுத்துவதற்காகவே அவர் இந்த ஒளிபரப்பு உரிமையை பெற்றுக்கொண்டதாகவும், அதற்கான அனைத்து பணத்தையும் தனிப்பட்ட ரீதியில் செலுத்துவதாகவும் எழுத்து மூலமான ஆவணத்தை சமர்ப்பிப்பதாகவும் கூறப்படுகிறது.

இரட்டைக் குடியுரிமை விவகாரம் காரணமாக டயானா கமகேவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க உரிமையில்லை என உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (9) தெரிவித்தது.

அதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

east tamil

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

east tamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

east tamil

Leave a Comment