யாழில் குழந்தை பிரசவித்த சிறுமி தலைமறைவு!

Date:

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று(11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

2027 வரவு செலவுத் திட்டம்: முக்கிய அம்சங்கள்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று (12) நாடாளுமன்றத்தில் 2027-ஆம் ஆண்டுக்கான...

3 பிக்குகள் கைது!

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும்...

காதலரை மணந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் தான் கல்லூரி காலத்தில் இருந்து காதலித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்