நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து காயம் காரணமாக பத்திரன விலகல்

Date:

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடி வரும் மதீஷ பத்திரன காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார்.

17 வது ஐபிஎல் தொடரில் நடப்பு சம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

சிஎஸ்கே அணிக்காக இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதீஷ பத்திரன விளையாடி வந்தார். இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும் அவர் சாய்த்திருந்தார்.

இதனிடையே காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்ட அவர், சிஎஸ்கே விளையாடிய கடந்த 2 ஆட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தசைநார் முறிவு சிகிச்சை பெறுவதற்காக அவர் இலங்கை சென்றுள்ளார்.

சிகிச்சை முடிந்தபிறகு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இவர் நடப்பு சீசனின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்