குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி வழிபாடு!

Date:

புதுடெல்லி: டெல்லி குருத்வாராவில் குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி சென்று வழிபட்டார்.

சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆட்சியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்ட அவரது பிறந்த தினத்தில் சீக்கியர்கள் பல்வேறு பகுதிகளிலும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் அமைந்துள்ள சிஸ் கஞ்ச் சாஹிப் குருத்வாராவில் பிரதமர் மோடி இன்று காலை வருகை தந்துள்ளார். அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்று சிறப்பித்தனர்.

PM Modi worships at the Delhi gurudwara without special security  arrangements || டெல்லி குருத்வாராவில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி  சென்று வழிபட்ட பிரதமர் மோடி

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தினை முன்னிட்டு குருத்வாராவில் வழிபாடு மேற்கொண்டார். பிரதமரின் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் வழியில் பலத்த பாதுகாப்பு எதுவும் செய்யப்படவில்லை. இதேபோன்று பிரதமருக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்