ரி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஜொனி பேர்ஸ்டோ, சாம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜாக்ஸ், ரீஸ் டாப்லி ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து உள்நாட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ரி20 தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறி தாயகம் திரும்புவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதனால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட பகுதியில் கலந்து கொள்ளமாட்டார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1